Politics
மனைவி நல வேட்பு விழா

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூர் அறிவு திருக்கோயிலில் மனைவி நல வேட்பு விழா, 22வது ஆண்டு விழா நேற்று காலை நடந்தது.
மன்ற தலைவர் சர்வஜித் தலைமை வகித்தார். பொறுப்பாசிரியர் வேலாயுதம் முன்னிலை வகித்தார். செயலாளர் ராமர் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் முருகன் வரவேற்றார். முதுநிலை பேராசிரியர் கற்பக விநாயகம் பேசினார். விழாவில் பங்கேற்ற ஏராளமான தம்பதிகள் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் ஆப்பிள், ரோஜா பூ கொடுத்து தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டனர். துணைத் தலைவர் வேல்முருகன் நன்றி கூறினார்.