Politics
BRICS: மோடி -புதின் சந்திப்பு; புதினுக்கு 'திருக்குறள்' புத்தகம் Gift - என்ன பேசினார்கள்?
BRICS மாநாட்டையொட்டி மோடி - புதின் சந்திப்பு நடைபெற்றது. ரஷ்ய மொழிபெயர்ப்புடன் கூடிய திருக்குறள் பிரதியை புதினுக்கு மோடி வழங்கினார்|Modi met Putin in Delhi to discuss bilateral ties and gifted him a Russian translation of Thirukkural.

டெல்லியில் புதினை சந்தித்த பிரதமர் மோடி, வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்ட உறவுகள் குறித்து ஆலோசித்தார். புதினுக்கு திருக்குறள் பரிசளித்தார்.
டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின்.
இன்று இந்தியப் பிரதமர் மோடி - புதின் சந்திப்பு தனிப்பட்ட முறையில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பு குறித்து மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“பிஷ்கேக்கில் நாங்கள் இருவரும் சந்தித்திருந்தோம். அடுத்த இரண்டு வாரங்களுக்குள்ளே டெல்லியில் அதிபர் புதினை மீண்டும் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி.
இன்றைய சந்திப்பின் போது நாங்கள் கலந்தாலோசித்த முக்கியமான விஷயங்கள்:
> ‘பொருளாதாரக் கூட்டுறவுத் திட்டம் 2030’-ஐ செயல்படுத்துவது உட்பட, இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவது,
> கட்டமைப்பு, ஆற்றல் (எனர்ஜி), தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவது,
> நமது பூமியின் நலனை மேம்படுத்தும் நோக்கில், இந்தியா வகிக்கும் பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் பேசினோம்”
புதினுக்குத் திருக்குறள் புத்தகத்தைப் பரிசாக வழங்கியிருக்கிறார் மோடி. அது குறித்து, “ரஷ்ய அதிபர் புதினுக்குத் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் ரஷ்ய மொழிபெயர்ப்புப் பிரதியைப் பரிசளித்தேன்.
திருக்குறள் தேச எல்லைகள், மொழிகளைக் கடந்த திருவள்ளுவரின் அளப்பரிய ஞானத்தைப் பறைசாற்றுகிறது” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மோடி.
