Politics
BRICS | டெல்லி வந்த ரஷ்ய அதிபர் புதின் – திருக்குறள் புத்தகத்தை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி
பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக டெல்லி வந்த ரஷ்ய அதிபர் புதினை திருக்குறள் புத்தகத்தை வழங்கி பிரதமர் மோடி வரவேற்றார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் 18வது உச்சிமாநாடு 12 மற்றும் 13 ஆகிய இரு நாட்கள் டெல்லியில் நடைபெறுகிறது. இதில், எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளும் அங்கம் வகித்துவருகின்றன.
இந்நிலையில், 18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை தாங்குகிறது. இதற்காக பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் இந்தியாவுக்கு வருகை தந்துவருகின்றனர். அதன்படி நாளை தொடங்க இருக்கும் இரண்டு நாள் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதின் இன்று டெல்லி வந்தடைந்தார்.
தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதினை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை கொடுத்தார். மேலும், ரஷ்ய அதிபர் புதின் – பிரதமர் மோடி ஆகியோர் இருதரப்பு சந்திப்பை நடத்தினர்.
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi and Russian President Vladimir Putin hold a bilateral meeting on the sidelines of BRICS Summit 2026.
இருதரப்புச் சந்திப்புக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடியும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் பாரத் மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இன்னோப்ரோம் கண்காட்சியை பார்வையிட ஒரே காரில் பயணித்து, கண்காட்சி இடத்தை அடைந்தனர். பின், ரஷ்ய அதிபர் புதினும், பிரதமர் நரேந்திர மோடியும், இன்னோப்ரோம் கண்காட்சியை பார்வையிட்டனர்.
#WATCH | BRICS Summit 2026 | Delhi: After their bilateral meeting, Prime Minister Narendra Modi and Russian President Vladimir Putin share a car to head to the exhibition at Bharat Mandapam.
Leaders' Session of BRICS Business Forum will be held here shortly.
இதன்பிறகு, 24-வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்க ரஷ்யாவிற்கு வருகை தருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்தார். பிரதமர் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக டெல்லி வந்த உலகத் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
ஜோதிகாவின் 20ம் ஆண்டு திருமண உடையில் இவ்வளவு காதல் குறியீடுகளா? வெளியான சுவாரஸ்ய தகவல்கள்!
20ம் ஆண்டு திருமண உறவை கொண்டாடும் விதமாக, சூர்யா - ஜோதிகா மீண்டும் திருமணம்!
இதில் காதலை உணர்த்தும் வகையில் ஜோதிகாவின் உடையில் பல குறியீடுகள் இருந்துள்ளன.
சுவாரஸ்யமான அந்த டீடெய்ல்ஸை இங்கே தெரிஞ்சுக்கோங்க!
