Arts, culture, entertainment and media
டோரதி படத்தின் பின்னணி இசை வெளியீட்டு விழா: கார்த்திக் சுப்புராஜ் அறிவிப்பு!

டோரதி திரைப்படத்தின் பின்னணி இசை வெளியீட்டு விழா அறிவிப்பை இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் வெளியிட்டார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உடன் இசையமைப்பாளர் இளையராஜா
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் 10-வது திரைப்படமாக ‘டோரதி’ உருவாகியுள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மதுரையைக் களமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
முன்னர் வெளியான கல்யாண விருந்து, முத்துமணி பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் வரவேற்பைப் பெற்றன. இளையராஜா எழுதிய இப்பாடல்கள் இன்றைய காலத்து இளைஞர்களும் ரசிக்கும்படி அமைந்துள்ளது. அதேபோல, சில வாரங்களுக்கு முன் வெளியான டீசரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, டோரதி திரைப்படத்தின் பின்னணி இசை வெளியீடு நாளை (செப். 5) நடைபெறும் என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “நான் டோரதி படத்தின் முதல் பதிப்பை ராஜா சாரிடம் காட்டியபோது, அவர் என்ன சொல்லப் போகிறார் என ஆர்வமாக இருந்தேன். படம் முடிந்த பின் சில நிமிடம் அமைதியாக இருந்த அவர், என்னைப் பார்த்து ‘அழகான படம். நாளை காலை வேலையை ஆரம்பிக்கலாம்’ என்றார். ராஜா சார் என் படத்திற்கு இசையமைக்க ஒப்புக் கொண்டார் என்பது எனக்கு மிகவும் பரவசமான உணர்ச்சியைக் கொடுத்தது.
அதே உற்சாகத்தில் இருந்தபோது, படம் வெளியாவதற்கு முன்பே பின்னணி இசையை ஒரு தனி ஆல்பமாக வெளியிட வேண்டும் என அவர் கூறினார்.
அப்போது, கண்டிப்பாக ஒரு சம்பவம் நடக்கப்போகிறது என நான் நினைத்து ஆர்வமானேன். இப்போது, இங்கே வந்துள்ளோம்.
டோரதி படத்தின் முழு பின்னணி இசைக்கோர்வை நாளை டிஜிட்டலாகவும், வினைல் வடிவிலும் நாளை (செப். 5) வெளியாகிறது.
அதேபோல, நாளை இமேஜ் ஆடிட்டோரியத்தில் 40 நிமிட முழு பின்னணி இசைக்கோர்வை நேரடி இசை நிகழ்ச்சியாக நடைபெறும்” என்றும் அறிவித்துள்ளார்.
படத்தின் பின்னணி இசையை பட வெளியீட்டிற்கு முன்பே வெளியிடுவதால் இளையராஜா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Dorothy film's OST launch event: Karthik Subbaraj makes the announcement!
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.