Politics
விவசாய நிலத்தில் காப்பர் ஒயர் திருடியவர் கைது
மயிலம்: மயிலம் அருகே விவசாய நிலத்திலிருந்து காப்பர் ஒயர் திருடிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
மயிலம் அடுத்த தென் களவாய் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து 46; விவசாயி. இவர் தனது நிலத்தில் உள்ள மோட்டார் செட்டில், 4 ஸ்டார்ட்டர்கள், மற்றும் 50 மீ., காப்பர் ஒயர் ஆகியவற்றை திருடி கொண்டு நேற்று முன்தினம் 3 பேர் பைக்கில் வேகமாக சென்றனர்.
இதை பார்த்த கிராம மக்கள் உடனடியாக பைக்கில் சென்ற மூவரையும் மடக்கி பிடித்து மயிலம் போலீசில் ஒப்படைத்தனர்.
மயிலம் போலீசார் மூவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்ததில், அந்த மூவரும், கடலுார் மாவட்டம் நெய்வேலி அடுத்த மந்தாரக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சாரங்கபாணி என்பவர் மகன் விஜி 38; மயிலம் அருகே உள்ள ஜக்காம்பேட்டை கிராமத்தை சேர்ந்த முனியாண்டி மகன் வேல்முருகன் 41; அதே ஊரை சேர்ந்த ராஜி மகன் ராஜதுரை 21; என்பது தெரியவந்தது. மேலும் விவசாய நிலத்தில் திருடியதையும் ஒப்பு கொண்டனர்.
தொடர்ந்து கடத்தலுக்கு பயன்படுத்திய பைக் மற்றும் மின்சாதன பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, மூவரையும் கைது செய்தனர்.