Politics
'விநாயகப் பெருமானின் அருளால் வளம் பெருகட்டும்'-முதல்வர் விஜய் வாழ்த்து

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முக்கிய கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்திக்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'விநாயகர் சதுர்த்தி திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திருநாளில் தொடங்கும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேறி, புதிய நம்பிக்கைகள் மலர்ந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும்! மக்களின் எண்ணங்கள் ஈடேறி, அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில் பயணிக்கட்டும்!' என தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)