Politics
கவர்னர், முதல்வர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து
புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கவர்னர், முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கவர்னர் கைலாஷ்நாதன் நம்முடைய பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக, பாரம்பரிய உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி, நம்மிடையே மத நல்லிணக்கத்தையும் சமுதாய ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வளர்க்க வேண்டும். இந்த திருநாள் அனைவரது வாழ்விலும் வளத்தையும் நலத்தையும் கொண்டு வர வேண்டும் என வாழ்த்துகிறேன்.
முதல்வர் ரங்கசாமி விநாயக பெருமானை தொழுது, புதிய செயல்களை தொடங்கினால் வெற்றி கிட்டும் என்பது மக்களின் நம்பிக்கை. அதன்படி, நாம் மேற்கொள்ளும் நற்காரியங்கள் அனைத்தும் தடைகளின்றி விரைந்து வெற்றி பெற விநாயக பெருமானின் பரிபூரண அருள் எப்போதும் நமக்கு துணை நிற்கட்டும்.
புதிய தொடக்கங்களின் சிறப்பை உணர்த்தும் இந்த நாள் அனைவரது இல்லத்திலம் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் கொண்டு வருவதோடு, சமூகத்தில் ஒற்றுமையும், நல்லிணக்கமும் தழைத்தோங்க வழி வகுப்பதாக அமையட்டும்.
இதேபோல, அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணராவ், ராஜவேலு, சிவக்கொழுந்து, ராஜசேகர், எம்.பி., செல்வகணபதி, எம்.எல்.ஏ.,க்கள், காங்., தலைவர் வைத்திலிங்கம், தி.மு.க., அமைப்பாளர் சிவா, பா.ஜ., தலைவர் ராமலிங்கம், இந்து முன்னணி மாநில தலைவர் சனில்குமார் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.