வடமாநில வாலிபர்கள் இருவர் கைது
வியாசர்பாடி, செப். 18- வியாசர்பாடி, எஸ்.எம்.நகரில் வியாசர்பாடி தனிப்படை போலீசார் நேற்று ரோந்துப்பணியில்
வியாசர்பாடி, எஸ்.எம்.நகரில் வியாசர்பாடி தனிப்படை போலீசார் நேற்று ரோந்துப்பணியில் இருந்த போது, இரண்டு ராஜஸ்தான் வாலிபர்களை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 9,000 ரூபாய் மதிப்புள்ள கஞ்சா ஆயில் அரை கிலோ இருந்தது கண்டறியப்பட்டது.
பிடிபட்டவர்கள் ராஜஸ்தானை சேர்ந்த சுகாஷ் கோரா, 23 மற்றும் விகாஷ், 22 என்பதும், இருவரும் மாதவரம் மற்றும் கொசப்பேட்டையில் தங்கி கேட்டரிங் வேலை செய்து வருவதும், போதை வஸ்துகளை மாத்திரை மற்றும் எண்ணெய் ஆக விற்பதும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா ஆயில், 300 கிராம் மெத்த பெட்டமைன் கைப்பற்றப்பட்டது.
ஒடிசாவில் இருந்து 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த இருவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
சாம்பல்பூரில் இருந்து போத்தனுார் வரை செல்லும் விரைவு ரயில் பெரம்பூர் ரயில் நிலையத்திற்கு நேற்று மதியம் வந்தது. அப்போது முன்பதிவு இல்லாத பெட்டியில் சென்ட்ரல் உட்கோட்ட கஞ்சா தடுப்பு பிரிவு போலீசார் சோதனையிட்டனர். அதில், பயணி இருவரின் பையில், 10 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக ஒடிசாவை சேர்ந்த தனமாலி போயி, 19 மற்றும் கேரளாவை சேர்ந்த முகமது சபீக், 26 என இருவர் கைது செய்யப்பட்டனர். இருவரும் கஞ்சா உடன் வண்ணாரப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
வீட்டின் முன் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் ஏற்கனவே 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று 16 வயது சிறுவன் மற்றும் கொடுங்கையூரை சேர்ந்த அரவிந்த், 24 ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர் தம்பியுடன் கைது
புளியந்தோப்பு காவல் மாவட்டத்தை சேர்ந்த 44 வயது நபர், சினிமா துறையில் உதவியாளராக பணிபுரிந்து தற்பொழுது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்து வருகிறார். இவரது மனைவி பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு கணவன் மனைவி இருவரும் சாப்பிட்டுவிட்டு கதவை தாழ்பால் போடாமல் தூங்கிவிட்டனர். இரவு 12 மணி அளவில் இவரது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அந்தப் பெண் கூச்சலிடவே அந்த நபரை பிடிக்க முயற்சி செய்துள்ளனர் அப்போது அந்த மர்ம நபர் கணவன், மனைவி இருவரையும் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார் அவருக்கு உதவியாக மற்றொருவரும் இருந்தது தெரிய வந்தது. இது குறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி நேற்று கொடுங்கையூர் சூழ்புனல் கரை பகுதியைச் சேர்ந்த தீபக், 23 மற்றும் அவரது தம்பி ராகுல், 22 ஆகிய இருவரை கைது செய்தனர். இதில் தீபக் மது போதையில் வீட்டுக்குள் சென்று பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததும் அவர் மாட்டிக் கொண்டதும் அவரை அவரது தம்பி காப்பாற்ற முயற்சி செய்ததும் தெரிய வந்தது. இருவரும் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
படப்பை அருகே ஆதனுார் ஊராட்சி டி.டி.சி.,நகரை சேர்ந்த பார்த்திபன் மனைவி புதனிதாதேவி,49. நேற்று முன்தினம் வீட்டின் வெளியே துணி காய வைத்துக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர் புனிதாதேவி கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தாலி சரடு செயினை பறித்து கொண்டு பைக்கில் ஏறி தப்பி சென்றனர்.
இதுகுறித்து புகாரையடுத்து, மணிமங்கலம் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து செயின் பறிப்பில் ஈடுப்பட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தரமணியில் ரயில் பயணியரை குறிவைத்து, மது விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
தரமணி ரயில் நிலையம் அருகே, நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு மேல், ஒரு நபர் ரயில் பயணியரை குறிவைத்து, மது பாட்டில் விற்று கொண்டிருந்தார். இதுகுறித்த தகவல்படி, தரமணி போலீசார் அங்கு சென்று நடத்திய விசாரணையில், துரைப்பாக்கம், எழில் நகரை சேர்ந்த புருஷோத்தமன், 30, ரயிலில் இறங்கி வரும் பயணியரிடம் விற்றது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து, 32 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்
போதை மாத்திரை, கஞ்சா விற்பனை செய்த இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, பெரும்பாக்கம், எழில்நகர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, பள்ளிக்கரணை, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
சந்தேகத்திற்கிடமான வீட்டில் சோதனை நடத்தினர். அங்கிருந்த, 100 கிராம் கஞ்சா, 200 வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் போதை மாத்திரைகள், மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் இவான் ஜலின், 20, என்ற இளம் பெண்ணை கைது செய்தனர்.
சூரிய சக்தி பலகையில் பொருத்தப்பட்ட காப்பர் ஒயர்கள் திருடிய, பீஹார் மாநிலத்தை சேர்ந்த மூன்று பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ், 38; எழும்பூரில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவரது நிறுவனத்திற்கு சொந்தமாக, காந்தி இர்வின் சாலையில் அடுக்குமாடி வாகன நிறுத்த கட்டடம் உள்ளது. அங்கு, மேல் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சூரிய சக்தி பலகையில் இருந்த, காப்பர் ஒயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இதுகுறித்து ராஜேஷ், எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், நடத்திய விசாரணையில் திருட்டில் ஈடுபட்ட, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது சோனு, 28, முகமது மெராஸ், 32, அஷ்ரார் அகமது, 33, ஆகிய மூவரை நேற்று கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பர் ஒயர்கள் மீட்கப்பட்டன.