Politics
அதிமுக முன்னாள் நிர்வாகி மணல் ஏற்றிவந்த டிராக்டர் மோதி உயிரிழப்பு..

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள பள்ளக்குழி அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முருகேசன் என்பவர், இருசக்கர வாகனத்தில் சென்றபோது, மணல் ஏற்றிச் சென்ற டிராக்டர் மோதி உயிரிழந்தார். டிராக்டரை ஓட்டிவந்த அதன் உரிமையாளர் ஆனந்தன், காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
ஆனால், மணல் திருட்டில் ஈடுபட்டவர்களை தட்டிக் கேட்ட முருகேசனை டிராக்டர் ஏற்றிக் கொலை செய்ததாகக் கூறி, பள்ளக்குழி என்ற இடத்தில் ஊர் மக்கள் முருகேசனின் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் மாவட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ஆனந்தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.