Politics
விபத்து ஏற்படுத்திய டிரைவருக்கு காப்பு
மல்லசமுத்திரம்:பள்ளக்குழி பகுதியில் டிராக்டர் மோதி, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பலியானதையடுத்து, டிரைவர் கைது செய்யப்பட்டார்.
அடுத்த பள்ளக்குழி கிராமத்தில், நேற்று முன்தினம் மாலை, 3:00 மணிக்கு,
டிராக்டரில் வண்டல்மண் ஏற்றி சென்றபோது எதிரே வந்த, 'ஆக்டிவா'
இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், பள்ளக்குழி ஈச்சங்காடு
பகுதியை சேர்ந்த, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் முருகன், 48, சம்பவ
இடத்திலேயே பலியானார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய
பள்ளக்குழிஅக்ரஹாரம், கரட்டுவளவு பகுதியை சேர்ந்த டிரைவர்
வெங்கடாசலம் மகன் ஆனந்த், 35, என்பவரை, நேற்று கைது செய்து
வருகின்றனர்.