Politics
மேற்கு வங்க இடைத்தேர்தல்: வேட்பாளர்களை அறிவித்த திரிணமூல் அதிருப்தி அணி!

மேற்கு வங்க இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை திரிணமூல் அதிருப்தி அணி அறிவித்துள்ளது குறித்து...
மேற்கு வங்க இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை திரிணமூல் அதிருப்தி அணி திங்கள்கிழமை (செப். 14) அறிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து, மமதா பானர்ஜிக்கு எதிராக ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் திரிணமூல் அதிருப்தி அணி உருவாகியது. இதனால், திரிணமூல் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவோடு, எதிர்க்கட்சித் தலைவராக ரிதப்ரதா பானர்ஜி இருந்து வருகிறார்.
மேற்கு வங்கத்தின் நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.
இதைத் தொடர்ந்து, திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி அணி சார்பில் நந்திகிராம் தொகுதியில் முகமது எதெஷானுல் ஹக், ரெஜிநகர் தொகுதியில் சஃபியுதீன் ஷேக் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, நந்திகிராம் தொகுதியில் மமதா பானர்ஜி போட்டியிட்டால் எங்கள் அணியின் வேட்பாளர் வாபஸ் பெறுவார் என ரிதப்ரதா பானர்ஜி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மமதா பானர்ஜி போட்டியிடாமல் அவரது அணி சார்பாக வேட்பாளர்களை நிறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது..
The dissident faction of the Trinamool announced its candidates for the West Bengal by-elections on Monday (Sept. 14).
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
