Arts, culture, entertainment and media
தமிழ் சினிமாவில் முதல் முறை; ஹாலிவுட்டில் ரீமேக்காகும் விஜய் சேதுபதி படம்!

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2024ஆம் ஆண்டு வெளியாகி 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிய படம் ‘மகாராஜா’. பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் ‘தி ரூட்’ இணைந்து தயாரித்திருந்த இப்படம், விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமாக வெளியானது. பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், முனீஸ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன், சிங்கம் புலி, அபிராமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருந்தார்.
ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் சிறுமி பாலியல் வன்கொடுமை, வித்தியாசமான திரைக்கதை, விறுவிறுப்புடன் கூடிய காட்சிகள் என பல்வேறு அம்சங்களுடன் வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் வசூலிலும் ரூ.100 கோடியை கடந்து சாதனை படைத்தது. இதன் மூலம் ரூ.100 கோடி கிளப்பில் முதல் முறையாக விஜய் சேதுபதி நாயகனாக நடித்த படம் இணைந்தது. இப்படத்தின் இயக்குநர் நித்திலன் சாமிநாதனை ரஜினி, விஜய் உள்ளிட்டோர் நேரில் அழைத்து பாராட்டினர். ஓ.டி.டி.யில் வெளியான பிறகு வட இந்தியாவிலும் இந்த படத்திற்கு வரவேற்பு இருந்தது. தொடர்ந்து 100வது நாள் வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்றது. பின்பு தயாரிப்பு நிறுவனம் நித்திலன் சாமிநாதனுக்கு பிஎம்டபள்யூ கார் ஒன்றை பரிசாக வழங்கியது.
இப்படத்தை இந்தியில் அமிர் கான் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அதற்கடுத்து எந்த தகவலும் இல்லை. பின்பு சீனாவில் சீன மொழியில் டப் செய்து வெளியிடப்பட்டது. அங்கும் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 20 கோடிக்கும் மேல் வசூலித்தது. தொடர்ந்து இந்திய, வெளிநாடு என பாராட்டை பெற்று வந்த இப்படம் தற்போது ஹாலிவுட்டில் ரீமேக்காகவுள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனமான பேஷன் ஸ்டூடியோஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், “இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல். ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனத்தால் ஹாலிவுட்டில் ரீமேக்காகும் முதல் தமிழ்த் திரைப்படமாக 'மகாராஜா' மாறியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே இந்த ஹாலிவுட் ரீமேக்கில் 'இண்டர்ஸ்டெல்லார்' படத்தில் நடித்த மேத்யூ மெக்கோனஹி (Matthew McConaughey) நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் உலா வருகிறது.
A HISTORIC MILESTONE! 🔥#Maharaja becomes the first Tamil film to be made in Hollywood by a major studio ❤️🔥#MakkalSelvan@VijaySethuOffl
Written and Directed by @Dir_Nithilan@anuragkashyap72@mamtamohan@Natty_Nataraj@Abhiramiact@AjaneeshB@Philoedit@DKP_DOP… pic.twitter.com/FZSY0QA1r1
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)