Crime, law and justice
ஆம்னி பஸ்சில் திருடப்பட்ட 40 சவரன் மீட்பு

துாத்துக்குடி: திருநெல்வேலி தனியார் கல்லுாரி பேராசிரியை ஒருவர், கணவருடன் ஆம்னி பஸ்சில் ஆக.,27 சென்னைக்கு சென்றார்.
துாத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சாலையோர ஓட்டலில், ஆம்னி பஸ் நிறுத்தப்பட்டபோது பேராசிரியையின் பையில் இருந்த, 40 சவரன் நகைகள் திருடப்பட்டது. போலீசார் விசாரித்தனர். மத்திய பிரதேசம் மாநி லத்தைச் சேர்ந்த மகசூத் கான் 35, நகைகளை திருடியது தெரிந்தது. தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர்.