Religion
இன்று இனிதாக ... (05.09.2026) சென்னை
ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில் கண்ணன் புறப்பாடு- - காலை 7:00 மணி. திருக்கட்சி நம்பி திருநட்சத்திர விழா- - மாலை 4:30 மணி. புன்னை மர வாகன புறப்பாடு- - மாலை -6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
இஸ்கான் கோவில் பிரபுபாதா வியாச பூஜையை முன்னிட்டு பாகவத வகுப்பு, குருபூஜை, அபிஷேகம், கீர்த்தனை- - காலை 7:30 மணி முதல். இடம்: அக்கரை, சோழிங்கநல்லுார்.
அஷ்டலட்சுமி கோவில் அபிஷேகம் --- காலை 7:00 மணி. சிறப்பு அலங்காரம் -- மாலை 4:00 மணி முதல். இடம்: பெசன்ட் நகர்.
ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கம்ப ராமாயண சொற்பொழிவு -- புலவர் அரங்கராசன். இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.
வேணுகோபால சுவாமி கோவில் சுவாமி பிரதிஷ்டை வைபவம் மற்றும் விநாயகருக்கு அபிஷேகம் -- காலை 7:00 மணி, வெண்ணை காப்பு அலங்காரம் - மாலை 7:00 மணி. இடம்: 2வது தெரு, கோபாலபுரம்.
பால சுப்ரமணிய சுவாமி ஸத்சங்கம் விக்னேஷ் குழுவினரின் 'மேஜிக்கல் வாய்ஸ்' பக்தி பாடல்கள் நிகழ்ச்சி - மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.
ஆன்மிக சொற்பொழிவு திருவண்ணாமலை மகிமை தலைப்பில், சுவாமிநாதன் சொற்பொழிவு, மாலை 5:30 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்.