Crime, law and justice
நிழற்குடை சேதம் சீரமைக்க பயணியர் கோரிக்கை
உத்திரமேரூர்: உத்திரமேரூர் – மானாம்பதி செல்லும் வழியில், ஆரோக்கியபுரம் கூட்டுச்சாலையில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இவ்வழியாக, வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த பேருந்து நிறுத்தத்தை ஆர்.என்.கண்டிகை, ஆரோக்கியபுரம், மெட்ரோ சிட்டி பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பேருந்து நிறுத்தத்தில் கட்டப்பட்டுள்ள நிழற்குடை சேதமடைந்து, கான்கிரீட் பூச்சு உதிர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன.
இதனால், பயணியர் வெயில் மற்றும் மழையில் நனைந்து கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு நிழற்குடை அலங்கோலமாக மாறியுள்ளது.
எனவே, சேதமடைந்துள்ள நிழற்குடையை சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.