Religion
பக்தர்கள் விரும்பிய பஞ்சகவ்ய விநாயகர்

திருநகர்: திருப்பரங்குன்றம், திருநகர் பகுதிகளில் பஞ்சகவ்யம் விநாயகர் சிலைகளை பக்தர்கள் விரும்பி வாங்கிச் சென்று வீடுகளில் பூஜை செய்தனர்.
விநாயகர் சதுர்த்திக்காக களிமண்ணால் தயாரிக்கப் பட்டு கலர் பெயின்ட் அடித்த பல்வேறு வடிவ விநாயகர் சிலைகள் கடைகளில் விற்பனை செய்யப் படும்.
இந்தச் சிலைகளை பக்தர்கள் வாங்கிச் சென்று வீடுகளில் பூஜை செய்து வருகின்றனர். கலர் தீட்டப்படாத களிமண் சிலைகளை வாங்கி வீட்டில் பூஜை செய்து மூன்றாவது அல்லது ஐந்தாவது நாளில் நீர்நிலைகளில் பக்தர்கள் கரைக்கின்றனர். இந்தாண்டு ஏராளமான கடைகளில் அரை அடி முதல் முக்கால் அடி உயர பஞ்ச கவ்யம் விநாயகர் சிலைகளும் ஏராளமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. அவற்றை வழிபாடு செய்வதற்காக பக்தர்கள் விரும்பி வாங்கிச் சென்றனர்.