Arts, culture, entertainment and media
ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்: காசில்லா மருத்துவம் வழங்கிட கோரி, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் இளங்கோபிரபு தலைமை தாங்கினார். பொருளாளர் ரத்தினம் வரவேற்றார்.
செயலாளர் அய்யாகண்ணு துவக்கவுரை ஆற்றினார். துணை தலைவர்கள் பொன்முடி, அண்ணாதுரை, ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சி.ஐ.டி.யு., போக்குவரத்து துறை மாவட்ட பொது செயலாளர் மூர்த்தி கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். காசில்லா மருத்துவம் வழங்கிட வேண்டும்; மருத்துவ காப்பீட்டு குளறுபடிகளை நீக்குதல்; மருத்துவ காப்பீட்டு அட்டையை, அரசே வழங்குதல்; உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட செயலாளர் ராஜரத்தினம் நன்றி கூறினார்.