Arts, culture, entertainment and media
வி.சி.க.,வில் போட்டா போட்டி தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை
பண்ருட்டி: பண்ருட்டி சட்டசபை தொகுதி வி.சி.க.,வினரின் போட்டா போட்டியால் சட்டம் ஒழுங்கு பாதிக்காமல் இருக்கும் பொருட்டு தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி சட்டசபை தொகுதி வி.சி.க.,வின் மாவட்ட செயலாளர் அருட்செல்வன் தலைமையில் இன்று 5ம் தேதி நெல்லிக்குப்பம் பஸ் நிலையம் அருகில் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி நகர செயலாளர் மகேந்திரன் கடந்த 22ம் தேதி நெல்லிக்குப்பம் போலீசில் மனு அளித்தார்.
அதே தேதியில், அதே இடத்தில் அதே தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தை நடத்த அனுமதி கோரி மாவட்ட துணை செயலாளர் திருமாறன் கடந்த 1ம் தேதி நெல்லிக்குப்பம் போலீசில் மனு அளித்தார்.
இதனால், இருகோஷ்டியினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் சந்திரன் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. கூட்டத்தில், டி.எஸ்.பி., ரகுபதி, நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் வேலுமணி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முதலில் அனுமதி கோரிய மனுவின் படி வரும் இன்று 5ம் தேதி நகர செயலாளர் மகேந்திரனுக்கு அனுமதி அளிப்பது எனவும், திருமாறன் தரப்பினர் நாளை 6ம் தேதி நடத்திக்கொள்ளலாம் என கூறினர். அதனை ஏற்க மறுத்த மாவட்ட துணை செயலாளர் திருமார்பன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.