Arts, culture, entertainment and media
“நடிகர் விஜய் சேதுபதிக்குத் துணை நிற்போம்” - அ.தி.மு.க. எம்பி இன்பதுரை உறுதி!

தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசிய கருத்துக்கள், முதலமைச்சர் விஜய்யுடன் ஒப்பிட்டுப் பேசியதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்துள்ளன.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கடந்த சனிக்கிழமை (12.09.2026) ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி, அந்த நிகழ்ச்சியை ஒட்டி சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக விஜய் சேதுபதி தெரிவித்த கருத்துக்கள், சமூக வலைத்தளங்களில் முதலமைச்சர் விஜய்யின் அரசியல் செயல்பாடுகளுடன் ஒப்பிட்டு பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தின.
இதனைத் தொடர்ந்து, சிலர் நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில், அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் சட்டத்துறை செயலாளருமான இன்பரை, தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஆதரவாகக் கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், “நடிகர் விஜய் சேதுபதியின் கருத்துரிமையைப் பாதுகாக்க அவருக்கு சட்டரீதியாகத் துணை நிற்போம்” என இன்பத்துரை தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)