Arts, culture, entertainment and media
“தெறித்து ஓடுவது தலைவருக்கான தகுதி இல்லை…” - விஜய் சேதுபதி பேச்சு வைரல்

“தெறித்து ஓடுவது தலைவருக்கான தகுதி இல்லை…” பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் விஜய் சேதுபதி பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 10 கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி மாலை தொடங்கியது. தொடர்ந்து லீடர், ஹவுஸ்மேட்ஸ் என அனைத்து போட்டியாளர்களும் விறுவிறுப்பாக விளையாடி வருகின்றனர். எந்த சீசனிலும் இல்லாத ஒன்றாக மாமன்றம் போன்ற அமைப்பில் பிக்பாஸ் நடைபெறுகிறது. சமூகத்தில் அனைவரும் அரசியல் பேசி வரும் சூழலில், பிக்பாஸிலும் இந்த அமைப்பு உருவாகியுள்ளது.
ஆளும் அணி மற்றும் எதிர் அணி என இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆளும் அணியின் தலைவராக ஷாதிகாவும், எதிர் அணியின் தலைவியாக வினோத் பாபுவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சட்டமன்றம் போல நிர்வாக அணி, எதிர் அணி என 2 அணிகள் செயல்பட்டு வருகின்றன. நேற்று இரவு நடந்த நிகழ்வில் போட்டியாளர்களிடையே பிக்பாஸ் தொகுப்பாளரும், நடிகருமான விஜய் சேதுபதி பேசுகையில், “தலைவர் என்றால் என்னவென்று தெரியாமல்.. தலைமை பண்பு என்றால் என்னவென்று தெரியாமல், வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளி தெளித்துவிட்டு, எதிரணி மீது பழியை தூக்கி போட்டு, அங்கிருந்து தெறிந்து ஓடுவது தலைவருக்கான தகுதி இல்லை. அது ஏமாற்று வேலை.” என்று பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
26 வருஷமா சர்க்கரை நோய்... ஆனாலும் அதே சுறுசுறுப்பு எப்படி? எஸ்.வி. சேகர் பின்பற்றும் விநோத டயட் சீக்ரெட்!
26 வருடங்களாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார் எஸ்.வி.சேகர்.
தற்போது 75 வயதாகும் அவர், விநோதமான ஒரு டயட் சீக்ரெட்டை பின்பற்றி வருகிறார்.
அப்படி என்ன சீக்ரெட் அது? எல்லாருக்கும் ஏற்றதா? நல்ல டயட்டா?
