Politics
தி.மு.க., செயற்குழு கூட்டம் மாவட்ட செயலர் அழைப்பு
விழுப்புரம்: தி.மு.க., சார்பில், விழுப்புரம் மற்றும் வானுார் தொகுதிகளுக்கான செயற்குழு கூட்டம் நாளை நடக்கிறது.
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் லட்சுமணன் அறிக்கை:
விழுப்புரம் மற்றும் வானுார் சட்டசபை தொகுதிகளுக்கான செயற்குழு கூட்டம் 10ம் தேதி வியாழக்கிழமை பிற்பகல் 3:00 மணிக்கு, விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில், எனது தலைமையில் நடக்கிறது.
இக்கூட்டத்தில், தலைமை பிரதிநிதிகளான புதுச்சேரி மாநில தி.மு.க., அமைப்பாளர் சிவா, மாநில மாணவரணி செயலாளர் வீரமணி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.
இக்கூட்டத்தில், கடந்த ஜூன் 22ம் தேதி நடந்த தி.மு.க., தலைமை செயற்குழு கூட்டத்தில் அறிவித்தபடி, கட்சி நிர்வாக சீரமைப்பு தீர்மானங்களை செயல்படுத்துவது குறித்தும், வரும் 15ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் முப்பெரும் விழாவில் பங்கேற்பது குறித்தும், கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
இதனால், மாநில, மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், தலைவர்கள், தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அனைவரும் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
