Politics
தி.மு.க., செயற்குழு கூட்டம்

கரூர்:கரூரில் உள்ள தி.மு.க., அலுவலகத்தில், மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜி பேசினார். பகுதி, நகர, ஒன்றிய, டவுன் பஞ்., நிர்வாகிககளை, வயது வரம்பின் அடிப்படையில் மறுசீரமைப்பு பணிகளை தலைமை தணிக்கைகுழு உறுப்பினர் முகமது சகி, முன்னாள் எம்.எல்.ஏ., பிரபாகரன் முன்னிலையில் நடத்துவது என்றும், முன்னாள் அமைச்சர்கள் உள்பட தி.மு.க.,வினர் மீது பொய் வழக்கு போடும் த.வெ.க., அரசை கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.