Religion
பிடாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
எருமப்பட்டி:எருமப்பட்டி, வைத்தியநாதபுரத்தில் பழமைவாய்ந்த பிடாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை
வைத்தியநாதபுரத்தில் பழமைவாய்ந்த பிடாரியம்மன் கோவில்
அமைந்துள்ளது. இக்கோவிலை புதுப்பிக்கும் பணி நடந்து முடிந்ததை
அடுத்து, கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, கணபதி
ஹோமம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் நடந்தன.
ஸ்ரீவிநாயகர், பிடாரியம்மன், கருப்பண்ணசாமி, மதுரைவீரன் மற்றும்
பரிவார தொய்வங்களின் கோபுர கலசங்களுக்கு மஹா கும்பாபிஷேக விழா
நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்
செய்தனர்.