Politics
மிசா சர்ச்சை... மு.க. ஸ்டாலின் கைதின் காவல் ஆணை நகலை வெளியிட்ட திமுக!
MK Stalin Misa Arrest | தவெக ஐடி விங் இப்படி detention copy கேட்டிருந்த நிலையில் அதற்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ளது திமுக.

மிசா சட்டம் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கூறிய கருத்துகளுக்கு விளக்கம் அளித்த திமுக தலைவர் ஸ்டாலின், மிசாவில் கைதாகி சிறை சென்ற போது பல்வேறு இன்னல்களை அங்கு சந்தித்ததாக கூறினார். மக்களுக்காக போராடும் போராளிகள் இதுபோன்ற அடக்குமுறைகளை கடந்துதான் வந்துள்ளதாகவும், யார் கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது என்றும் முதலமைச்சர் விஜய்க்கு பதில் அளித்தார்.
இந்த நிலையில் தவெக ஐடி விங் மு.க.ஸ்டாலினின் இந்தப் பதில் குறித்து பதிவு வெளியிட்டுள்ளது. அதில், "பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட “சிறை சென்ற தியாகி” என்ற போலி பிம்பம் உடைந்ததில் பதற்றம் பற்றிக்கொண்டதோ?. எதை உலகறியக் கூடாது என்று மஞ்சள் துண்டு தந்தை முதல் ஆபாசநதி மகன் வரை கட்டி அடைகாத்தார்களோ, அது அம்பலமானதில் அச்சம் அதிகமாகியிருக்கிறது. அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மட்டும் மூச்சுவிடவில்லை. உண்மைக்கு விளம்பரங்களோ, விளக்கங்களோ தேவையில்லை. ஆனால் இங்கே shooting video வெளியாகிறது என்றால், போலி பிம்பம் உடைந்தது உண்மையாகிறது." என்று விமர்சித்திருந்தது.
தவெக ஐடி விங் இப்படி detention copy கேட்டிருந்த நிலையில் அதற்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ளது திமுக. திமுக ஐடி விங் வெளியிட்ட பதிவில், "பத்திரிகையாளர்களை நேருக்கு நேர் சந்திக்கத் துப்பில்லாமல், சட்டமன்றத்தில் கேட்ட கேள்விக்கான பதிலுரைக்கு மூன்று நாட்கள் மனப்பாடம் செய்து, கேமரா முன்னால் கத்தி, கதறி நடிக்கும் தற்குறிக்கு நிஜ வலிகளின் உணர்வு எப்படிப் புரியும்? மிசா தியாகம் என்பது, சினிமாவில் நடிப்பது போல, பின்னாடி கையை வைத்து தடவிக்கொண்டு பஞ்சு மெத்தையில் உருள்வதல்ல; அது கொள்கை உறுதி மாறாமல், சிறைச்சாலையின் இரும்புக் கம்பிகளுக்கிடையே ரத்தம் சிந்திய நிஜம்!
Call sheet காப்பியையும், வருமானத்தை மறைத்து வாங்கிய 'IT Raid' காப்பியையும், வசனகர்த்தாக்கள் எழுதிக்கொடுக்கும் Script பேப்பரையும் மட்டுமே பார்த்துப் பழகிய மூளையே! உனக்கு எமர்ஜென்சி காலத்தில் நடந்த மிசா கொடூரங்களை ஆவணப்படுத்திய இஸ்மாயில் கமிஷன் அறிக்கை எனும் வரலாற்று ஆவணத்தைப் படித்துப் புரிந்துகொள்ளும் வக்கு எங்கே இருக்கப் போகிறது?
எச்சில் பழம் பொறுக்கும் அணில்கள் கண்ணை மூடிக்கொண்டால், உழைப்பாலும் தியாகத்தாலும் கட்டமைக்கப்பட்ட திமுகவின் வரலாறு இருண்டு போய்விடாது! ஊர் முழுவதும் பொய்யைப் பரப்பும் சாக்கடைக் கூட்டத்தை அம்பலப்படுத்த அரசியல் நாகரிகத்தோடு எங்கள் தலைவர் அளித்த விளக்கம், அந்தத் தற்குறிகளுக்கானது… pic.twitter.com/b9ONe1zPvC
கொள்கை, சித்தாந்தம் எதுவும் இல்லாமல், தியாகிகளைக் கொச்சைப்படுத்தி அரசியல் செய்ய நினைக்கும் உங்கள் அநாகரிகச் சாக்கடையிலேயே, தவெக எனும் காகிதக் கப்பல் மூழ்கும். இதோ அந்த எமர்ஜென்சி காலத்து மிசா சிறைவாசம் தொடர்பான வரலாற்று ஆதாரங்கள். குரைக்கும் விலங்குகளே கவ்விக் கொண்டு ஓடுங்கள். வரலாற்றில் நிலைத்து நிற்கும் மாபெரும் தியாகத்தை உருவ கேலி செய்த உங்களின் கேடுகெட்ட அற்பத்தனத்தை தமிழ்நாட்டு மக்கள் காரித் துப்புகிறார்கள். காரணம், இந்த ஆவணங்களில் உள்ள பதிவுகளை அவர்கள் தங்கள் நெஞ்சில் பதிய வைத்திருக்கிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்து மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைதானதற்கான ஆதாரத்தை இணைத்துள்ளது. கைது அறிக்கை, இஸ்மாயில் ஆணைய அறிக்கை, நாடாளுமன்றத்தில் அன்றைய உள்துறை அமைச்சர் பிரம்மானந்த ரெட்டி தெரிவித்த குறிப்பு ஆகியவற்றை ஆதாரங்களாக இணைத்துள்ளது.
ஜோதிகாவின் 20ம் ஆண்டு திருமண உடையில் இவ்வளவு காதல் குறியீடுகளா? வெளியான சுவாரஸ்ய தகவல்கள்!
20ம் ஆண்டு திருமண உறவை கொண்டாடும் விதமாக, சூர்யா - ஜோதிகா மீண்டும் திருமணம்!
இதில் காதலை உணர்த்தும் வகையில் ஜோதிகாவின் உடையில் பல குறியீடுகள் இருந்துள்ளன.
சுவாரஸ்யமான அந்த டீடெய்ல்ஸை இங்கே தெரிஞ்சுக்கோங்க!
