நெல் அறுவடை இயந்திர பழுது பார்ப்பின் போது கிளீனர் பலி
கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் நெல் அறுவடை இயந்திர பழுது பார்ப்பின் போது பயிர்களை வெட்டும் கார்டர் பார் விழுந்து கிளீனர் இறந்தார்.
சின்னசேலம் அடுத்த அம்மகளத்துார் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் பாண்டியன், 36; நெல் அறுவடை இயந்திர வாகனத்தில் கிளீனராக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை நெல் அறுவடை இயந்திரம் பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது இயந்திரத்தில் பயிர்களை வெட்டுவதற்குப் பயன்படுத்தும் முன் பகுதியான கார்டர் பார் பாண்டியன் மீது விழுந்தது.
இதில் பலத்த காயமடைந்த பாண்டியனை சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லம் வழியில் இறந்தார்.
புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.