Religion
செல்வ விநாயகர் கோவிலில் சதுர்த்தி சிறப்பு அபிஷேகம்

கள்ளக்குறிச்சி: அம்மகளத்துார் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழாசிறப்பு அபிஷேகம் நேற்று நடந்தது .
விநாயகர் சதுர்த்தியையொட்டி சின்னசேலம் அடுத்த அம்மகளத்துார் செல்வ விநாயகர் கோவிலில் நேற்று முன்தினம் சிறப்பு பூஜை நடந்தது. காலை சுவாமிக்கு பால், தயிர், இளநீர், தேன் உட்பட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேக, அலங்காரம் மற் றும் தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து சுவாமி தங்கக் கவசத்தில் அருள்பாலித்தார். கணபதி யாகம், கலசநார் அபிஷேகம் செய்யப்பட்டது. வெங்கடேச குருக்கள் தலைமையிலான குழுவினர் பூஜைகளை செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா ஞானவேல் செய்திருந்தார்.