Religion
ராதானூர் திருவிருந்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
ஆர்.எஸ்.மங்கலம்: ராதானுார் திருவிருந்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்துார் அருகே ராதானுார் சவுந்தர நாயகி சமேத திருவிருந்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக முதல் மூன்று கால யாகசாலை பூஜைகளும், வாஸ்து சாந்தி பூஜைகளும் நடந்தன. தொடர்ந்து நேற்று காலை விநாயகர் பூஜை, கோமாதா பூஜை நடைபெற்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் சிவாச்சாரியார்களால் ஊர்வலமாக கோயில் கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவர்களுக்கு புனித நீரில் அபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை ராஜ வளநாடு ராதானுார் கிராம மக்கள் செய்திருந்தனர். சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


