Education
டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது யார், யாருக்கு?
திருப்பூர்:கல்வித்துறையில் மிகச்சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டு தோறும்,
மிகச்சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில்
ஆண்டு தோறும், 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' வழங்கப்பட்டு
வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான மாநில அளவிலான
தேர்வுக்குழு வாயிலாக, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த
தலைமையாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி மற்றும்
இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம், 11 பேர் விருதுக்கு தேர்வு
செய்யப்பட்டுள்ளனர்.
குமாரவேலு, ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, கன்னிவாடி.
ராஜேஸ்வரி, தலைமையாசிரியை, அரசு மேல்நிலைப்பள்ளி,
இடுவம்பாளையம். ஷோபனா, அரசு உயர்நிலைப்பள்ளி, மங்கலம். புஷ்பலதா,
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பல்லடம். ரவி, ஓவிய ஆசிரியர்,
வீ.மூ.செ.த.வி. மேல்நிலைப்பள்ளி, தாயம்பாளையம், ஊதியூர்.
பாக்கியலட்சுமி, ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அவிநாசி.
அமுதவல்லி, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
ஆண்டிபாளையம். மோகன், நகராட்சி துவக்கப்பள்ளி, புது
ராமகிருஷ்ணாபுரம், திருப்பூர் வடக்கு. செந்தில்வடிவு, தலைமை
ஆசிரியர், நகராட்சி துவக்கப்பள்ளி, மாஸ்கோ நகர், திருப்பூர்.
ஷியாம்சுந்தர், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி,
கருமஞ்சிறை, ஊத்துக்குளி. சின்னையா, விவேகானந்தா வித்யாலயா
மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர், செட்டிபாளையம், திருப்பூர்.