தொடர் விடுமுறை எதிரொலி :டோல்கேட்டில் டிராபிக் ஜாம்

விக்கிரவாண்டி: விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை காரணமாக தென் மாவட்டங்களை நோக்கி வாகனங்கள் அணிவகுத்ததால் விக்கிரவாண்டி டோல்கேட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விநாயகர் சதுர்த்தி நாளை 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் நேற்று சனி மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், சென்னையிலிருந்து ஏராளமான வாகனங்கள் நேற்று காலை முதலே தென் மாவட்டங்களை நோக்கி படையெடுத்ததால் சென்னை - திருச்சி சாலையில் வாகனங்கள் அணிவகுத்து சென்றன.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி டோல்கேட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு அதிகமான வாகனங்கள் சென்றதால் காலையில் கூடுதலாக 3 லேன்கள் திறந்து விடப்பட்டு 9 லேன்கள் மூலம் வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
நேற்று காலை 6:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை 43 ஆயிரம் வாகனங்கள் சென்றன. மேலும் கூடுதலாக வாகனங்கள் செல்லும் என்பதால் எஸ்.பி., மதிவாணன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி., சரவணகுமார் தலைமையில் விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.