பிகாரில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து!

தடம்புரண்ட எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள்.
பிகாரில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலம், ஆரா சந்திப்பு ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தில்லி செல்லும் சிக்கிம் மகாநந்தா எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதாக மூத்த அதிகாரி தெரிவித்தார். அதிகாலை 4 மணியளவில் நடந்த இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.
எனினும், விபத்து காரணமாக ரயில் போக்குவரத்து சற்று பாதிக்கப்பட்டுள்ளது. ஆரா சந்திப்பில் இருந்து ரயில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. ஓட்டுநர் சிவப்பு சிக்னலைத் தாண்டிச் சென்றதால் அவர் செய்த தவறின் காரணமாகவே இந்த ரயில் தடம் புரண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருப்பினும், விரிவான விசாரணைக்குப் பிறகே விபத்துக்கான துல்லியமான காரணம் தெரியவரும் என ரயில்வே அதிகாரி தெரிவித்தார். இந்த விபத்தால் டவுன்லைன் வழித்தடம் பாதிக்கப்படவில்லை என்றும், காலை 7.23 மணியளவில் ஆரா சந்திப்பு நிலையத்திலிருந்து அந்த ரயில் புறப்பட்டுச் சென்றது என்றும் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி கூறினார்.
Two bogies of the Delhi-bound Sikkim Mahananda Express derailed at Bihar's Ara Junction railway station in the early hours of Sunday, a senior official said.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.