Religion
ஆர்டர் கொடுத்தால் 1 மணி நேரத்தில் சிலை ரெடி... தொப்பை பிள்ளையாரை வாங்க அலைமோதும் கூட்டம்

இங்கு அரை அடி முதல் 2 அடி உயரம் வரை பல்வேறு அளவுகளில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன.
விநாயகர் சதுர்த்தி விழா இன்று (செப்டம்பர் 14) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் வீதியில் கைவினைக் கலைஞர்களால் தயாரிக்கப்படும் களிமண் விநாயகர் சிலைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்தச் சிலைகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
