போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு திண்டிவனத்தில் எஸ்.பி., தகவல்

திண்டிவனம்: 'திண்டிவனத்தில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்' என எஸ்.பி., தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் எஸ்.பி., மதிவாணன் நேற்று முன்தினம் திண்டிவனம் நகர காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, வழக்கு தொடர்பாக பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்கள், நிலுவையில் உள்ள வழக்குகள் விபரம், துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை பார்வை யிட்டார். குற்றவழக்குக ளின் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட விபரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த பின், போலீசாரின் குறைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'திண்டிவனம் நகரத்தில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண நடைபாதை ஆக்கிர மிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
டவுன் டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் காமராஜ், சப் இன்ஸ்பெக்டர் தமிழ்மணி, தனிப் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் உடனிருந்தனர்.