சமூக நீதிக்கான விருது பரிந்துரைகள் வரவேற்பு
ஊட்டி: கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: சமூக நீதிக்கான பெரியார் விருது பெறுவோருக்கு, 5
ஊட்டி: கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
சமூக நீதிக்கான பெரியார் விருது பெறுவோருக்கு, 5 லட்சம் ரூபாய் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப் பதக்கத்துடன், தகுதிரையும் வழங்கப்படுகிறது. இந்த விருது, முதலமைச்சரால் தேர்வு செய்யப்படும் நிலையில், 2026ம் ஆண்டுக்கான விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில், சமூக நீதிக்காக பாடுபட்டு, பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதி உடையவர்கள், தங்களது விண்ணப்பத்தை கலெக்டருக்கு அனுப்பி வைக்கலாம். தங்களது சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் படிவத்தை பெற்று, பூர்த்தி செய்து, அக்., 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.