Religion
மதுரை மாவட்டம் நிகழ்ச்சி
செப்.10கோயில் * கும்பாபிஷேகம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, பொற்றாமரை குளத்தில் ஆச்சார்ய பத்து விதமான
கோயில் * கும்பாபிஷேகம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, பொற்றாமரை குளத்தில் ஆச்சார்ய பத்து விதமான துாய்மை நீராடல், திருமுறை விண்ணப்பம், தீபாராதனை, திருநீறு பிரசாதம் வழங்குதல், காலை 8:00 முதல் 10:00 மணி வரை, பிரதான யாகசாலையில் மங்கள இசை, முளைப்பாரி இடுதல், பிரதான ஆச்சார்யர்கள் ரக் ஷாபந்தனம், கங்கணம் கட்டுதல், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மாலை 6:00 முதல் இரவு 7:15 மணி வரை.
பக்தி சொற்பொழிவு * தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - வாசிநாதம் சுவாமிகள், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.
* ஆவணி அமாவாசை முன்னிட்டு சாய் பஜனை: நிகழ்த்துபவர்கள் -- சாய் அன்பர்கள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பள்ளி, கல்லுாரி * மதுரை நான்காம் தமிழ்ச் சங்க 125வது ஆண்டு விழா: செந்தமிழ்க் கல்லுாரி, மதுரை, புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைப்பவர்: பேராசிரியர் சாலமன் பாப்பையா, தலைமை: சங்க தலைவர் நாகேந்திர சேதுபதி, பங்கேற்பு: குன்றக்குடி ஆதினம் பொன்னம்பல அடிகளார், ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், காலை 10:00 மணி, தமிழுக்குப் பெருமை சங்க காலமா சமகாலமா தலைப்பில் பட்டிமன்றம், நடுவர் : பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், மதியம் 1:30 மணி.
* மனித உரிமையியல், பத்திரிகை, ஊடகம் குறித்த பயிலரங்கம்: மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லுாரி, மதுரை, பத்திரிகையாளர் ப.திருமலை, அகில இந்திய வானொலி மதுரை உதவி இயக்குநர் தாராதேவி, மனித உரிமை செயற்பாட்டாளர் பாலசுந்தரி, காலை 10:30 மணி முதல்.
* தொழில்முனைவோராக மாறுவதற்கான கருத்தரங்கம்: மதுரைக் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்:லுாபிட் இன்ஜினியரிங் சொலுாஸன்ஸ் இயக்குநர் முத்துராஜ், ஏற்பாடு: இயற்பியல் துறை, காலை 10:45 மணி.
பொது * மதுரை கிழக்கு கோட்ட மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: மின்செயற்பொறியாளர் அலுவலகம், மேலுார், காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
* நல்லாசிரியர் விருதுபெற்ற ஆசிரியர்களுக்கு வித்யா சேவா ரத்னா விருது வழங்கும் விழா: யூனியன் கிளப் அரங்கம், காந்தி மியூசியம் அருகில், மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: எம்.எல்.ஏ.,க்கள் கார்த்திகேயன், கோபிசன், கருப்பையா, ரோட்டரி மாவட்ட ஆளுநர் கார்த்திக், ஏற்பாடு: அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு, மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம், இரவு 7:00 மணி.
மருத்துவம் * குழந்தைகள் கற்றல் சிரமம் - இலவச மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, ஆலோசனை வழங்குவோர்: டாக்டர்கள் ரஹுமத் நிஷா, ஆஸ்மா பாட்சா, மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை.
விளையாட்டு * பள்ளி மாணவர்களுக்கான கபடி, கால்பந்து, தடகளம் உள்ளிட்ட போட்டிகளுக்கான முதல்வர் கோப்பை போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 6:30 மணி முதல்.