Education
டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது ஆசிரியருக்கு பாராட்டு விழா
அவிநாசி, செப். 10– அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள ஒன்றிய துவக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர்
அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள ஒன்றிய துவக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பாக்கியலட்சுமிக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது கிடைத்துள்ளது.
இதனையடுத்து, பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சித்ரா தலைமையில், வட்டார கல்வி அலுவலர்கள் திருநாவுக்கரசு, சுந்தர்ராஜ் முன்னிலையில், தலைமை ஆசிரியர் செல்வி ஏற்பாட்டில் விழா நடந்தது. பள்ளி மேலாண்மைக் குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்று, ஆசிரியர் பாக்கியலட்சுமிக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தனர்.