Arts, culture, entertainment and media
Vikram: 'ஃபுல் மீல்ஸ் கொடுத்துதான் அனுப்புவேன்!' - 2027 ரிலீஸ் - 'சீயான் 63' டைட்டில் அறிவிப்பு!
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 63-வது படத்திற்கு 'பவர் ஹவுஸ்' எனத் தலைப்பிட்டிருக்கிறார்கள். | Chiyaan Vikram unites with director Anand Shankar for 'Power House' (Chiyaan 63).

விக்ரமின் 63வது படத்தின் தலைப்பைத் தற்போது அறிவித்திருக்கிறார்கள்.
'இருமுகன்' படத்திற்குப் பிறகு இயக்குநர் ஆனந்த் சங்கருடன் மீண்டும் கூட்டணி அமைத்திருக்கிறார் நடிகர் விக்ரம்.
'வீர தீர சூரன்' ரிலீஸுக்குப் பிறகு விக்ரம் நடிக்கும் அவருடைய 63-ஆவது படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது.
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. மலையாளத்தில் 'சர்வம் மாயா' படத்தின் மூலம் பிரபலமான ரியா ஷிபு, இப்படத்திலும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அத்தோடு ஊர்வசி, விடிவி கணேஷ், சம்யுக்தா ஹெக்டே ஆகியோரும் நடிக்கிறார்கள். 'மகான்' படத்திற்குப் பிறகு சந்தோஷ் நாராயணன், விக்ரம் நடிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் டீசரை இன்று வெளியிட்டிருக்கிறார்கள்.
'பவர் ஹவுஸ்' என இப்படத்திற்குத் தலைப்பிட்டிருக்கிறார்கள். கேட்டரிங் சர்வீஸ் வைத்திருக்கும் குடும்பம், இந்தக் குடும்பத்தின் உறுப்பினராக இருக்கும் விக்ரம் கதாபாத்திரத்தின் ஆக்ஷன் பக்கங்கள் என்பதாக இப்படம் இருக்கும் என்பதை இந்த டைட்டில் டீசரில் தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.
இந்தப் படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்பதையும் இன்றைய டைட்டில் டீசர் வெளியீட்டோடு அறிவித்திருக்கிறது படக்குழு.
