Politics
சர்க்காரியா கமிஷன் விசாரணை; தினமலர் பழைய பக்கங்கள் என்ன சொல்கின்றன?
-நமது நிருபர்-போலீஸ் மானியக் கோரிக்கை மீதான விவாதம் முடிவில், சட்டசபையில் பேசிய முதல்வர் விஜய்,

சர்க்காரியா கமிஷன் தொடர்பான தினமலர் பழைய பக்கங்களை படிக்க கீழ்கண்ட லிங்க்களை கிளிக் செய்யவும்:
சர்க்காரியா கமிஷன் என்பது என்ன, எதற்காக அமைக்கப்பட்டது, விசாரணையில் நடந்தது என்ன என்பதை அறிய பலருக்கும் ஆர்வம் இருக்கும். 1970ம் ஆண்டுகளில் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் நடந்த ஊழல், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை பற்றி விசாரிக்க 1976ம் ஆண்டு அமைக்கப்பட்டதே சர்க்காரியா விசாரணை கமிஷன்.அப்போதைய கவர்னர் கே.கே.ஷாவிடம் எம்.ஜி.ஆர்., அளித்த புகார்களை விசாரிப்பதற்காக இந்த விசாரணை கமிஷனை அமைத்தது காங்கிரஸ் அரசு.கமிஷன் விசாரணையில், கருணாநிதி தலைமையிலான திமுக அரசால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் சாட்சியம் அளித்தனர்.
கடைசியில் சர்க்காரியா அளித்த இறுதி அறிக்கையில், ஊழல் நடந்திருப்பது நிரூபணம் ஆகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. விசாரணை நடந்த 1976ம் ஆண்டு தினமலர் நாளிதழில் வெளியான பக்கங்கள் இங்கே வாசகர்களுக்காக பதிவிடப்பட்டுள்ளன.அதில் வெளியாகி இருக்கும் செய்திகளை கொண்டு, சர்க்காரியா கமிஷன் விசாரணை பற்றிய முழுமையான தகவல்களை வாசகர்கள் அறிந்து கொள்ளலாம்.