Politics
நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கமுதி: கமுதி அருகே முஸ்டக்குறிச்சியில் நடந்த முகாமில் ரூ.4.39 லட்சத்தில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சிவகுரு பிரபாகரன் வழங்கினார்.
கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன், பரமக்குடி சப்-கலெக்டர் வினோதினி, மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் கிருஷ்ணகுமாரி முன்னிலை வகித்தனர்.
அப்போது வருவாய்த்துறை, சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்புத்துறை, பொது சுகாதாரத்துறை, வேளாண் துறைகள் சார்பில் சாதனை விளக்க கண்காட்சிகளை கலெக்டர் பார்வையிட்டார்.
பின் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை மூலம் இயற்கை மரணம் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இ-பட்டா, இலவச வீட்டு மனை பட்டா, புதிய மின்னணு குடும்ப அட்டை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் 131 பேருக்கு ரூ 4.39 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு 100க்கும் மேற்பட்டோர் மனுக்கள் அளித்தனர். மனுக்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் மனு கொடுத்து விட்டோம் என்று எண்ணாமல் அரசின் திட்டங்களை தெரிந்து பயன்பெறுவதுடன் மற்றவர்களும் பயன்பெற உறுதுணையாக இருக்க வேண்டும் என கலெக்டர் சிவகுரு பிரபாகரன் கூறினார்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார், பி.டி.ஓ.,க்கள் மேகராஜ், சந்திரசேகர் உட்பட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
