Arts, culture, entertainment and media
தாமிரபரணி தண்ணீர் கேட்டு விவசாயிகள் சாலை மறியல்

துாத்துக்குடி: தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விடக்கோரி, துாத்துக்குடி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அணையில் இருந்து, தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விடக்கோரி, துாத்துக்குடி மாவட்ட கடைமடை விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கோரம்பள்ளம், பெ ட்டைகுளம் ஆகிய குளங்களுக்கு, தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி, அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில், துாத்துக்குடி -- திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில், நேற்று மறியல் நடந்தது.இதில், கோரம்பள்ளம், குலையன்கரிசல், காலங்கரை, அத்திமரப்பட்டி உட்பட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச்சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். டிராக்டரை சாலையின் நடுவே நிறுத்தி, வாழைகளை கையில் ஏந்தி கோஷம் எழுப்பினர். அவர்களில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை, புதுக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.