மகள் மாயம்; தந்தை புகார்
குளித்தலை,:குளித்தலை அடுத்த கடவூர் யூனியன், செம்பியாநத்தம் பஞ்., திருமலை ராயபுரத்தை சேர்ந்த இளமாறன், 45,
அடுத்த கடவூர் யூனியன், செம்பியாநத்தம் பஞ்., திருமலை ராயபுரத்தை
சேர்ந்த இளமாறன், 45, விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் துளசிமணி,
22, கரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
7ம் தேதி காலை 7:00 மணியளவில் வழக்கம் போல் வேலைக்கு சென்றவர், பின்னர்
மாலையில் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும்,
எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என தந்தை
இளமாறன் கொடுத்த புகாரின் படி, பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து
தேடி வருகின்றனர்.