Politics
வ.உ.சி., பிறந்த நாள் விழா

திண்டுக்கல்: சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல்லில் வ.உ.சிதம்பரம் பிள்ளை திருஉருவச்சிலை அமைப்புக்குழு சார்பில் நடந்த விழாவிற்கு டிரஸ்ட் தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.
செயலாளர் தனபாலன் முன்னிலை வகித்தார். வ.உ.சி.,யின் பேரன் வ.உ.சி.வா.சிதம்பரம் பங்கேற்று திண்டுக்கல் திருச்சி ரோடு குடைக்காரர் பெட்ரோல் பங்க் அருகே வ.உ.சி., உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முன்னாள் அமைச்சர்கள் பெரியசாமி, சீனிவாசன், எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், அய்யனார், மேயர் இளமதி, த.வெ.க., மாவட்ட செயலாளர் தர்மராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., காந்திராஜன், முன்னாள் மேயர் மருதராஜ், வீரமார்பன் பிரேம்குமார் ஆகியோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சுரேஷ்குமார், சிவசண்முகராஜன், டிரஸ்ட் உறுப்பினர் மாரிமுத்து செய்திருந்தனர்.
சைவ பெருமக்கள் பேரவை சார்பில் நடந்த விழாவிற்கு தலைவர் நல்லதம்பி தலைமை வகித்தார். சிவாஜி பத்மநாபன், மாணிக்கம் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் சார்பில் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் நடந்த விழாவில் எம்.பி.,சச்சிதானந்தம் பங்கேற்று மலர் துாவி மரியாதை செய்தார். மாவட்ட செயலாளர் பிரபாகரன், மாநகர செயலாளர் அரபுமுகமது உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் சார்பில் பொறுப்பாளர் சரவணன் தலைமையிலும், தலைமை மன்றத்தில் மாவட்ட தலைவர் திருப்பதி தலைமையிலும் நிர்வாகிகள் பங்கேற்று வ.உ.சி., உருவப்படத்திற்கு மாலை அணிவித்தனர். வத்தலக்குண்டு காந்திநகர் வெள்ளாளர் பெருமக்கள் சங்க தலைவர் ஜெயமாணிக்கம் தலைமையில் துணைத்தலைவர் துரைப்பாண்டியன், செயலாளர் முத்துகிருஷ்ணன், பொருளாளர் சக்திவேல், சங்க ஆலோசகர் சவுந்தரராஜன் உள்ளிட்டோர் வ.உ.சி., உருவப்படத்திற்கு மாலை அணிவித்தனர்.வேடசந்துார் ஆத்துமேடு பகுதியில் வ.உ.சி., பேரவை நிர்வாகி முருகேசன் தலைமையில் எம்.எல்.ஏ., வீரா.சாமிநாதன் உள்ளிட்டோர் வ.உ.சி., உருவப்படத்திற்கு மாலை அணிவித்தனர்.அய்யலுாரில் வீரத்தமிழர் மக்கள் கழகம் சார்பில் மாவட்ட பொறுப்பாளர் அருண்குமார் தலைமையில் நடந்த விழாவில் நகர செயலாளர் மதன்பாபு, துணை செயலாளர் தேசிகவிநாயகம், ஒன்றிய செயலாளர் விஜயகுமார் பங்கேற்று வ.உ.சி., உருவப்படத்திற்கு மாலை அணிவித்தனர். தமிழ் வேள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் சரவணசெல்வம் தலைமையில் பொதுச்செயலாலர் ரமேஷ்குமார், முதன்மை செயலாளர் தியாகராஜன், பழநியில் தமிழக வேளாளர் பேரவை கவுரவத் தலைவர், கந்த விலாஸ் விபூதி ஸ்டோர் செல்வகுமார் உள்ளிட்டோர் வ.உ.சி., உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.