Arts, culture, entertainment and media
காப்பீட்டுத்திட்டத்தில் குளறுபடி அரசு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பூர்: புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைந்து, கட்டணமில்லா மருத்துவச்
புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைந்து, கட்டணமில்லா மருத்துவச் சிகிச்சையை முழுமையாக உறுதி செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்ட தணிக்கையாளர் மகுடேஸ்வரன் வரவேற்றார். மாவட்ட தலைவர் மேகவர்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். அரசு ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் ரங்கராஜ் ஆகியோர் பேசினர்.
புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை, தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்காமல் அரசே நேரடியாக ஏற்று நடத்த வேண்டும். ரொக்கமில்லா சிகிச்சை முறையை முழுமையாக உறுதிப்படுத்த வேண்டும். அவசர கால சிகிச்சைகளுக்கான செலவுத் தொகையை, 100 சதவீதம் முழுமையாக வழங்க வேண்டும். ஓய்வூதியர்களின் பெற்றோர், திருமணமாகாத மகன், மகள் மற்றும் கணவரை இழந்த மகள்களையும் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். ஆயுர்வேதா, யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவ முறைகளையும் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.மாவட்ட பொருளாளர் பாலச்சந்திரமூர்த்தி நன்றி கூறினார்.