Politics
“காலவெளியில் உன் இருப்பு சிறிதுதான்...” - அண்ணாவை நினைவுகூர்ந்த வைரமுத்து!

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 118 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்களில் அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் கவிஞர் வைரமுத்து, “அண்ணா! காலவெளியில் உன் இருப்பு சிறிதுதான். நீ வாழ்ந்தது 59.4 ஆண்டுகள். உன் பொதுவாழ்வு 35 ஆண்டுகள். கட்டியெழுப்பிய கட்சியோடு 19.5 ஆண்டுகள். ஆட்சிப் பொறுப்பில் வெறும் 22 மாதங்கள். ஆனால், நீ செய்த சாதனை புரிய 300 ஆண்டு வாழ்ந்தவனாலும் முடியாது. உன் பெயர் சொல்லாமல் அரசாள இயலாது உன் கொள்கை இல்லாமல் அரசியல் கிடையாது.
நீ சாமானியர்க்காகவே வாழ்ந்தவன்; சாமானியனாகவே மரித்தவன். பூமியின் மீது அதிகச் சிலைகள் புத்தருக்கு; இந்தியாவில் அம்பேத்கருக்கு; தமிழ்நாட்டில் உனக்கு. பொன்னடிகளுக்குப் புகழ் வணக்கம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)