Politics
விஜய் பயணம்! லண்டனில் திரிஷாவை கண்காணிக்கும் உளவுத்துறை!

வெளிநாடு முதலீடுகளை ஈர்ப்பதற்காக பிரிட்டன் செல்கிறார் முதல்வர் ஜோசப் விஜய். இதற்காக, மத்திய அரசால் வழங்கப்படும் டிப்ளமேட் பாஸ்போர்ட் பெறுவதற்கு சென்னை அண்ணாசாலையிலுள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்குச் சென்றார் விஜய். இந்த நிலையில், ஏற்கனவே லண்டனில் இருக்கும் நடிகை திரிஷாவை கண்காணிக்கிறது மத்திய உளவுத்துறை.
அரசியல் கட்சிகளின் தலைவர்கள், கவர்னர் கள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சர்வதேச பயணங்களை மேற்கொள்ள சிறப்பு சலுகைகளைக் கொண்ட ராஜதந்திர (டிப்ளமேட்) பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. ஆட்சிப்பொறுப் பில் இருப்பவர்கள், இந்த டிப்ளமேட் பாஸ்போர்ட் இல்லாமல் சாதாரண பாஸ்போர்ட்டில் வெளி நாடுகளுக்குச் செல்லக்கூடாது.
இத்தகைய பாஸ்போர்ட்டில் வெளிநாடு களுக்கு செல்பவர்கள், அங்கு ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அந்த நாட்டு காவல்துறை இவர்களை கைது செய்யமுடி யாது. சம்பந்தப்பட்டவர்கள் இந்தியா திரும்பிய பிறகு, இந்திய அரசாங்கத் திடம் புகார் தெரிவித்து இந்திய அரசின் அனுமதியுடன்தான் சம்பந்தப்பட்ட வெளிநாடுகள் சட்ட நடவடிக்கையை எடுக்கமுடியும். அந்தளவுக்கு பாதுகாப்பு மிகுந்தது டிப்ளமேட் பாஸ்போர்ட்.
அதேசமயம், சில அசௌகரியமும் டிப்ளமேட் பாஸ்போர்ட்டில் இருக்கிறது. குறிப்பாக, இத்தகைய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, எங்கிருந்து புறப்படு கிறாரோ அப்போதிலிருந்து மத்திய அரசின் கண்காணிப்பில் வந்துவிடுவார்கள். வெளிநாட்டில் எங்கு தங்குகிறார், யாரை எல்லாம் சந்திக்கிறார், என்ன நிகழ்வில் கலந்து கொள்கிறார், ஓரிடத்தில் எவ்வளவு நேரம் செலவிடுகிறார் என அனைத்தும் மத்திய அரசின் வசம் வந்துவிடும். அந்தளவுக்கு துல்லியமாக கண்காணிக்கப்படுவர். இந்த அசௌகரியம் இந்த பாஸ்போர்ட்டில் இருக்கிறது.
இந்த நிலையில்தான், டிப்ளமேட் பாஸ் போர்ட் எடுக்க மண்டல பாஸ்போர்ட் அலுவலகத் திற்கு வந்தார் முதல்வர் விஜய். அவருடன், அரசின் பொதுத்துறை செயலாளர் சுந்தரவள்ளி உட்பட 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வந்திருந்தனர். பாஸ்போர்ட் எடுக்க வரும் விஜய், சத்தமின்றி, ஆர்ப்பாட்ட மின்றி வந்து சென்றிருக்கலாம். ஆனால், அதையே ரோட் ஷோ மாதிரி ஆக்கியிருக்கிறார்கள் அதிகாரிகள். பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வரும் விஜய், நேரடியாக அலுவலக போர்ட்டிகோவில் காரை நிறுத்தி அப்படியே பாஸ்போர்ட் மண்டல அதிகாரியை சந்தித்திருக்க வேண்டும்.
மாறாக அவரும், அவருடன் திரண்டு வந்த ஒரு பெரும்படையும் அண்ணா சாலையிலேயே தங்களின் வாகனங்களை நிறுத்திவிட்டு, கீழே இறங்கி அலுவலகத்துக்கு நடந்து சென்றனர். விஜய் வருவது கசிய விடப்பட்டிருந்ததால் அவரின் ரசிகர்கள் கூட்டம் அந்த பகுதியில் திரண்டிருந்தது. மேலும், காவல் துறையினர் ஏகத்துக்கும் குவிக்கப்பட்டிருந்தனர். விஜய்யை கண்டதும் அவரது ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். அவர்களுக்கு கையசைத்தபடியே அலுவலகத்துக்குள் சென்றார் விஜய். அதாவது, ஒரு ரோட் ஷோவையே நடத்தினார்.
முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின், தமிழக கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி உள்ளிட்டோரும் டிப்ளமேட் பாஸ்போர்ட் எடுத்துள்ளனர். அதன் நடைமுறைக்காக பாஸ்போர்ட் அலுவலகம் வந்தபோது, அவர்கள் வந்ததும் தெரியாது, போனதும் தெரியாது. அப்படியிருக்கையில் டிப்ளமேட் பாஸ்போர்ட் எடுக்க விஜய் வருவதை இந்த அளவுக்கு அலப்பறை பண்ண வேண்டுமா? என்கிறார்கள் பாஸ்போர்ட் அலுவலகத்தினர்.
அலுவலகத்தில் விஜய்யிடம் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கேட்ட பல கேள்விகளுக்கு சுந்தரவள்ளிதான் பதில் சொல்லியிருக்கிறார். ஒரு கட்டத்தில், எதற்கு இவ்வளவு கேள்விகள் கேட் கிறீர்கள்? என்று கோபப்பட்டுள்ளார் சுந்தரவள்ளி.
பாஸ்போர்ட் நடைமுறைகளை முடித்து விட்டு வந்த விஜய், பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் பெறுவதற்காக காத்திருந்த பொதுமக்களுக்கு வணக்கம் வைத்தபடி வந்தார். ஒரு இளைஞருக்கு விஜய் வணக்கம் வைத்தபோது "சார், லஞ்சத்தை ஒழிப்பதாக சொல்லியிருக்கீங்க. ஆனா, உங்க ஆட்சியிலும் லஞ்சம் வாங்குவது குறையலை சார்'' என சொல்ல, பாஸ்போர்ட் அலுவலகமே அந்த இளைஞரை திரும்பிப் பார்த்தது. அந்த இளைஞருக்கு பதிலேதும் சொல்லாமல் சிரித்துக்கொண்டே வெளியேறினார் விஜய். அவர் சென்றதும், அந்த இளைஞரை அலேக்காக தூக்கிய போலீசார், கடுமையாக விசாரித்து அனுப்பியுள்ளனர்.
விரைவில் பிரிட்டன் செல்ல விஜய் திட்ட மிட்டுள்ள நிலையில், மத்திய அரசிடமிருந்து க்ளியரன்ஸ் கிடைத்துவிட்டதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பாகவே, ஆஸ்திரேலியா சென்ற நடிகை திரிஷா, அங்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், இலங்கைத் தமிழர்களுக்கும் எங்களுக்கும் நெருங்கிய உறவு இருக்கிறது எனத் தொடங்கி பல விசயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
இதனை நோட் பண்ணிய மத்திய உளவுத் துறை, உள்துறை அமைச்சகத்துக்குத் தெரியப் படுத்திய நிலையில், திரிஷாவை க்ளோஸாக வாட்ச்பண்ண டெல்லி உத்தரவிட்டதை அடுத்து திரிஷாவை தங்கள் வளையத்துக்குள் எடுத்துள் ளது உளவுத்துறை. இலங்கைக்கும் குறிப்பாக ஈழத்தமிழர்களுக்கும் திரிஷாவுக்கும் என்ன உறவு? என்ன தொடர்பு? என்பது குறித்தெல்லாம் சேகரிக்கத் தொடங்கியுள்ளனராம்.
ஆஸ்திரேலியாவிலிருந்து கிளம்பிய த்ரிஷா, தற்போது லண்டனில் இருக்கிறார். லண்டனுக்கு விஜய் வந்தபிறகு, திரிஷா சென்னை திரும்புவார் என்கிறது பயணத்திட்டத்தை அறிந்த வட்டாரம். இதற்கிடையே, சென்னை திரும்பியதும், 15 நபர்களுடன் இலங்கை செல்ல திரிஷா திட்ட மிட்டுள்ளார். இதற்கான நடைமுறைகளை செய்து முடித்துள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. அதேசமயம், சென்னை திரும்பியதும் 15 நபர் களுடன் இலங்கைக்கு திரிஷா செல்வதை மோப்பம் பிடித்துள்ள மத்திய உளவுத்துறை, எதற்கான இலங்கை பயணம் என சேகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆக, உளவுத்துறையின் வளையத்தில் இருக்கிறார் திரிஷா!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)