Politics
த.வெ.க., அஞ்சலி
விழுப்புரம்: வன்னியர்கள் இடஒதுக்கீடு போராட்டத்தில், இறந்தவர்களின் நினைவு மணிமண்டபத்தில் தெற்கு மாவட்ட த.வெ.க., சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்தில் இறந்த, 21 சமூக நீதி போராளிகளுக்கு விழுப்புரம் அருகே ஜானகிபுரத்தில் நினைவு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.
இங்கு, த.வெ.க., தெற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், போராளிகளின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.