Politics
பிரிக்ஸ் மாநாட்டில் ஜொலித்த தமிழ்நாடு.. ராமேஸ்வரம் கோவில் பின்புலத்துடன் தலைவர்களை வரவேற்ற பிரதமர் மோடி!

இந்தியாவின் தென் மாநிலத்தின் தொன்மையான பண்பாட்டை உலகரங்கில் வெளிப்படுத்தும் விதமாக ராமேஸ்வரம் கோவில் பின்புலம் அமைக்கப்பட்டிருந்தது
டெல்லியில் நடைபெற்று வரும் 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்க வந்த உலகத் தலைவர்களைப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்ற நிகழ்வில், தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலின் படம் பின்னணியில் இடம்பெற்றுள்ளது. இது சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்த சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட பல்வேறு பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்களைப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் வரவேற்றார்.
தலைவர்களை வரவேற்கும் நுழைவாயில் பகுதியில், இந்தியாவின் ஆன்மீக மற்றும் கலாச்சாரப் பெருமையைப் பறைசாற்றும் வகையில், தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதசுவாமி திருக்கோவிலின் பிரம்மாண்டமான பின்னணி வரைபடம் மற்றும் படங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இது மாநாட்டிற்கு வந்த உலகத் தலைவர்கள் மற்றும் சர்வதேச ஊடகங்களின் பார்வையை வெகுவாகக் கவர்ந்ததுடன், பிரிக்ஸ் மாநாட்டின் முக்கிய சிறப்பம்சமாகவும் மாறியது.
Chinese Prez Xi welcomed by PM Modi at BRICS summit; Indian PM explained to him about the iconic Ramanathaswamy Temple in Rameswaram, Tamil Nadu. pic.twitter.com/PpYOhNUvRU
— Sidhant Sibal (@sidhant) September 12, 2026
தலைவர்கள் வரவேற்பு நிகழ்வுக்குப் பிறகு, பாரத் மண்டபத்தில் உள்ள மாநாட்டு அரங்கில் பிரிக்ஸ் தலை பங்கேற்கும் உள் அரங்க நடைபெற்றது. இக்கூட்டத்தில் " உலகளாவிய ஆளுகை மற்றும் பன்முகத்தன்மையை வலுப்படுத்துதல்" என்ற முதன்மைத் தலைப்பில் உலகத் தலைவர்கள் தீவிர ஆலோசனை மேற்கொண்டனர்.
இம்மாநாட்டின் இடையே, பிரதமர் மோடி பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்பு உறவுகள் குறித்தும், பொருளாதாரம் மற்றும் வர்த்தக மேம்பாடு குறித்தும் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
இந்தியாவின் தென் மாநிலத்தின் தொன்மையான பண்பாட்டை உலகரங்கில் வெளிப்படுத்தும் விதமாக ராமேஸ்வரம் கோவில் பின்புலம் அமைக்கப்பட்டிருந்தது, இந்தியக் கலாச்சாரத்தின் மீதான ஈர்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
