Politics
ஆதவ் தொடர்ந்த வழக்கு- நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த வழக்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்க அவகாசம் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய ஜான் பிரிட்டோ என்பவர் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உறவினர் என அண்மையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அமலாக்கத்துறை வெளியிட்டிருந்த அறிக்கையை சுட்டிக்காட்டி, 758 கோடி ரூபாய் மதிப்புடைய போதைப்பொருள் கடத்தப்பட்ட வழக்கில் மூளையாக செயல்பட்ட ஜான் பிரிட்டோ பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் ஆர்ஜுனாவின் உறவினர் என்ற உண்மை அம்பலமாகியுள்ளது என தெரிவித்திருந்தார்.
ஆனால் ஜான் பிரிட்டோ தனது உறவினர் அல்ல எனவும் தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தெரிவித்த கருத்தை பின்வாங்க வேண்டும். தனக்கு ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என ஆதவ் அர்ஜுனா தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆதவ் அர்ஜூனாவின் மனுவிற்கு பதிலளிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக ஐடி விங்கிக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில் இன்று (15/09/2026) மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்யக் கூடுதல் அவகாசம் வேண்டும் என திமுக தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் செப்டம்பர் 21ஆம் தேதி வரை பதிலளிக்க அவகாசம் கொடுத்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)



