Religion
மயில் வாகனத்தில் உப்பூர் விநாயகர்
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா ஆண்டு தோறும் பத்து நாட்கள் நடக்கிறது. நான்காம் நாள் ஊர்வலமாக விநாயகர் மயில் வாகனத்தில் வீதி உலா வந்தார். முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது.
முக்கிய வீதிகள் வழியாக நடந்த ஊர்வலத்தின் போது பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். எட்டாம் நாளான செப்.,12 ல் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.