Religion
சிம்ம வாகனத்தில் உப்பூர் விநாயகர்
ஆர்.எஸ்.மங்கலம்: உப்பூர் வெயிலுகந்த விநாயகர் மூன்றாம் நாள் சிம்ம வாகனத்தில் ஊர்வலமாக வந்தார்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா செப்.,5ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து தினமும் வெள்ளி மூஷிக வாகனம், கேடய வாகனம் என விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. இந்நிலையில், மூன்றாம் நாள் ஊர்வலமாக சிம்ம வாகனத்தில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது.
முன்னதாக, மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர். தொடர்ந்து ஊர்வலமாகச் சென்ற விநாயகருக்கு தெருக்களில் பெண்கள் மாக்கோலமிட்டு வரவேற்று அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.