Politics
பல கட்சிகள் உடைந்தாலும் தி.மு.க., உடையவில்லை
சங்ககிரி: தி.மு.க.,வின், சேலம் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம், சங்-ககிரியில் நேற்று நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து தலைமை வகித்தார். அதில் மாவட்ட செயலர் செல்வகணபதி பேசியதாவது:
தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும் கட்சி இன்னும் உயிர்ப்-போடு செயல்படுகிறது. சிறிதும் உழைப்பு இல்லாமல், த.வெ.க., கட்சி, விபத்தில் ஆட்சிக்கு வந்துவிட்டது. தமிழக அரசு முந்தைய, தி.மு.க., அரசு கொண்டு வந்த திட்டங்களை தான், தற்போது பெயர் மாற்றி செயல்படுத்தி வருகிறது. ஆட்சி மாற்றத்துக்கு பின் பல கட்சிகள் உடைந்தாலும், தி.மு.க., மட்டும் உடையாமல் செயல்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
தி.மு.க., சட்ட திருத்த குழு செயலர் கிரிராஜன், தொழில்நுட்ப அணி மாநில துணை செயலர் அழகிரி, மாவட்ட துணை செய-லர்கள் சம்பத்குமார், சுந்தரம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், பூவாகவுண்டர் உள்பட பலர் பங்கேற்றனர்.